ராம பக்தர்களைத் தடுப்பவர்களை ஆட்சியதிகாரத்தில் அமர வைக்கலாமா என்று அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜாஜ்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா,
ஒட்டுமொத்த தேசமும் ராம மஹோத்சவத்தை கொண்டாடியபோது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், அவரது அரசியல் வாரிசும் பொதுமக்களைத் தடுத்ததாக குற்றம்சாட்டினார்.
ராம பக்தர்களைத் தடுப்பவர்களை ஆட்சியதிகாரத்தில் அமர வைக்கலாமா என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, ஒடிசாவை பூர்வீகமாக கொண்ட, ஒரிய மொழி பேசும் இளைஞர் ஒருவரை முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்வார் என்றும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் மீட்கப்படும் என்றும் அமித் ஷா சூளுரைத்தார்.