திரிணாமூல் காங்கிரசும் இடதுசாரிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் பாரசட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மேற்கு வங்கத்தை முதலில் காங்கிரசும், இடதுசாரிகளும் கொள்ளையடித்ததாகவும், தற்போது திரிணாமூல் காங்கிரஸ் இரு கரங்களால் மாநிலத்தைச் சூறையாடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் திரிணாமூல் காங்கிரசுக்கு அளிப்பதற்கு சமம் என்று கூறிய அவர், இரு கட்சிகளும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல செயல்படுவதாக குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை எதிர்க்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லியில் மட்டும் அந்தக் கட்சியுடன் நட்பு பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.