அஸ்ஸாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கழிவறையில் இருந்து 35 பாம்பு குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கழிவறை பகுதியில் 35 பாம்பு குட்டிகள் தலையை வெளியே நீட்டின.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான வீட்டின் உரிமையாளர், இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த விலங்கு நல ஆர்வலர்கள் 35 பாம்பு குட்டிகளையும் லாவகமாக பிடித்து, அவற்றை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.