திருச்சி காந்தி மார்க்கெட்டில் வரத்துக் குறைவின் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ பீன்ஸ் 80 ரூபாயும், உருளைக்கிழங்கு 40 ரூபாயும், கேரட், கத்திரிக்காய் மற்றும் பாகற்காய் ஆகியவை 20 ரூபாயும், இஞ்சி 90 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
இதனால் பல்வேறு காய்கறிகளின் விலை சதமடித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்துள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.