அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் தொலைந்த லாட்டரிக்கு ரூ.41 லட்சம் ஜாக்பாட் அடித்தது.
வர்ஜீனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் வாங்கிய லாட்டரி சீட்டை தனது மகளுடன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொலைத்துவிட்டதாக கருதினார்.
பின்னர், லாட்டரி கடைக்குச் சென்று கேட்டபோது அந்த சீட்டை அவர் கடையிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், அவர் வாங்கிய லாட்டரிக்கு 50 ஆயிரம் டாலர், அதாவது 41 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்ததை அறிந்து அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார்.