புனேயில் சிறுவன் ஓட்டிவந்த சொகுசு கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அவரது தந்தை மற்றும் தாத்தாவுக்கு மே 31 வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதியதில் ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
சிறுவனை காப்பாற்ற முயன்ற அவரது தந்தை மற்றும் தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் மே 31-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.