நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!
Sep 17, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 05:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் ஜவுளித்துறை, கடந்த சில ஆண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் வருடாந்திர தொழில்துறை ஆய்வறிக்கையின் படி, 2021-22 முதல் 2023-24 வரையிலான குறுகிய காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் 2 ஆயிரத்து 121 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, தற்போது ஆயிரத்து 672 ஆக குறைந்துள்ளது. அதேபோல, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி சார்ந்த 11 ஆயிரத்து 460 நிறுவனங்களில், 8 ஆயிரத்து 503 நிறுவனங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. அத்துடன் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் விசைத்தறி ஆலைகள் முடங்கியிருப்பது, ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில் துறையில் தீவிர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீழ்ச்சிக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 9 ரூபாய் 25 காசுகளாக இருப்பதால், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக, தமிழக ஜவுளித் துறையின் போட்டித்திறன் குறைந்து வருவதாக சுட்டிக்காட்டும் அவர்கள், இதனால் பல சிறு மற்றும் குறு மில் உரிமையாளர்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், என்.டி.சி மில்கள் இயங்கிய காலத்தில் பஞ்சு விலை கட்டுக்குள் இருந்ததாக கூறும் தொழில் துறையினர், தற்போது சில சிண்டிகேட் அமைப்புகள் விலையை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் தொழிலாளர் பற்றாக்குறை, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு, ‘பூஜ்ஜிய திரவக் கழிவு’ விதிமுறைகளால் ஏற்படும் கூடுதல் சுத்திகரிப்பு செலவுகள் ஆகியவை ஜவுளித் தொழிலின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. இதன் காரணமாக ஜவுளித்துறை மட்டுமின்றி அதனை சார்ந்துள்ள விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டு வரும் ஜவுளி துறையை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, மின் கட்டணத்தில் சலுகை வழங்குதல், மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துதல் மற்றும் தொழிலுக்கு ஆதரவான ஊக்கத் திட்டங்களை அறிவித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Tags: Tamil NaduMinistry of Textileselectricity tariffs increasetextile industrydmk govenmenteconomic backbonetextile sector
Share
Tweet
SendShare
Previous Post

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

Next Post

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies