சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகமாக வசூலாகி இருக்கிறது என்று அதிகாரப் பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி வசூலும் அதிகமாகி இருப்பதும் ஆரோக்யமான பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் முதல் முறையாக ரூ. 2 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வசூலில் நிர்வாக திறமையை பிரதிபலிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஏப்ரல் மாதத்தின் நிகர ஜிஎஸ்டி வருவாய் 1.92 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே கால வசூலை விட 17.1 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
நகரமயமாக்கல் பெருகி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி வசூலில் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் சிறப்பாகவே செயல்படுகின்றன
மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி வரி வசூலில், மத்திய பிரதேசம் ,உத்தர பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன.
15 சதவீதத்திற்கும் அதிகமான ஜிஎஸ்டி வசூலாகும், முதல் 15 மாநிலங்களின் வரிவசூல் என்பது , இந்தியாவின் மொத்த மாநிலங்களின் SGST வசூலில் 86 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.
குஜராத் , தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம் கேரளா,ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே ஜிஸ்டி வசூலாகிறது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு 15 சதவீதமாக இருந்த மத்திய பிரதேச ஜிஎஸ்டி வசூல் , இந்த ஆண்டு 19.53 சதவீதமாக உயர்ந்து , நாட்டில் அதிக ஜிஎஸ்டி வசூலாகும் மாநிலமாக முதலிடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக, உத்தரப்பிரதேசம் ஜிஎஸ்டி வரி வசூலில் 18.88 சதவீதம் வளர்ச்சியைக் காட்டி இருக்கிறது.
ஜிஎஸ்டி வரிவசூலில் 18.58 சதவீத வளர்ச்சியைக் காட்டி , மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது தெலுங்கானா மாநிலம். இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் 17.9 சதவீத வளர்ச்சியுடன் மகாராஷ்டிரா திகழ்கிறது.
நகரமயமாக்கல் பெருகி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி வசூலில் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் சிறப்பாகவே செயல்படுகின்றன என்று தான் பொருளாதார வல்லுநர்கள்கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிக தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் , குறைந்த தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் கிட்டத்தட்ட சமமான அளவில் ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி இருக்கிறது என்பது தான் ஜிஎஸ்டியின் வெற்றி என்றும் பார்க்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களும் எஸ்ஜிஎஸ்டி வரி வருமானத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு SGST வசூலாக 41 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய தமிழகம், நடப்பு ஆண்டில், அதிலிருந்து 10 சதவீதம் குறைந்திருக்கிறது.
வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற வீழ்ச்சி இல்லை. இந்த வீழ்ச்சிக்கு , சரியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாதது, சிறு மற்றும் குறுந் தொழில்களின் வளர்ச்சிக்கு திட்டங்கள் இல்லாதது போன்ற பல காரணங்கள் வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழக அரசு உண்மையான காரணங்களை ஆய்வு செய்து அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். இந்திய மாநிலங்களிலேயே அதிக கடன் சுமை உள்ள மாநிலம் தமிழகம் என்ற நிலை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அரசு நடந்து கொள்ளவேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதிக தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் , குறைந்த தனிநபர் வருமானம் உள்ள மாநிலமும் கிட்டத்தட்ட சமமான அளவில் ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி இருக்கிறது என்பது தான் ஜிஎஸ்டியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மாநிலங்கள் வாரியான ஜிஎஸ்டி வரி வசூலில், மத்திய பிரதேசம் ,உத்தர பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. SGST-யின் பங்கு CGST-யை விட அதிகமாக உள்ளது. எனவே மாநிலங்களுக்கு பெரிய பங்கு உள்ளது ஒட்டுமொத்த ஜிஎஸ்டிக்கு பங்களிக்கிறது.
இந்த உண்மையை உணர்ந்து தமிழக அரசு செய்யப்படவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு.