மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை வரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டைக்கு நாளை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலிலும், அதன் அருகே உள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிம் அமித் ஷா தரிசனம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.