முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் Zepto, Blinkit போன்று விரைவு வர்த்தகத் துறையில் இறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ மார்ட் நிறுவனம் அடுத்த மாதத் தொடக்கத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 முதல் 8 நகரங்களில் மளிகைப் பொருட்களை விநியோகிக்கவுள்ள ஜியோ மார்ட் நிறுவனம், படிப்படியாக தனது சேவையை ஆயிரம் நகரங்களுக்கு விரிவு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.