சீன நிறுவனங்களுக்குப் போட்டியாக குறைந்த விலையில் மின்சார வாகனங்களைத் தயாரிக்க வோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பாவில் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம், இதற்காக ரெனால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த காரின் விலை 21 ஆயிரத்து 746 டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 18 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் மின்சார கார் சந்தைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.