நேட்டா உறுப்பு நாடுகள் நெருப்புடன் விளையாடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேலை நாடுகள் ஆயுதங்கள் விநியோகம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாமென உக்ரைனுக்கு அறிவுறுத்துமாறு மேலை நாடுகளைக் கேட்டுக்கொண்ட புதின், ஆயுத பயன்பாடு உலகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.