ராமநாதபுரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள செல்போன் கடையில் வழக்கம் போல் ஊழியர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கடைக்கு முன்பாக செல்போன் பேசுவது போல் நின்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர், கடை ஊழியர் கவனிக்காத நேரத்தில் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.