ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் பட்டாசு குவியல் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
பூரி ஜெகநாதர் கோயிலில் சந்தன் ஜாத்ரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நரேந்திர புஷ்கரிணி ஆற்றங்கரையில் திருவிழா சடங்குகள் நடைபெற்றபோது சில பக்தர்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசு குவியல் தீப்பற்றி வெடித்தது. இதில் படுகாயமடைந்த 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.