மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒளிபரப்பியதற்காக ஒடிசாவில் உள்ள நந்திகோஷா தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில் வரும் 1ஆம் தேதி இறுதிக்கட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நந்திகோஷா தொலைக்காட்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி கருத்துக்கணிப்பை வெளியிட்டதாக நந்திகோஷா தனியார் தொலைக்காட்சி மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.