கேரளாவில் அரசுப் பேருந்தை பிரசவ வார்டாக மாற்றி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருச்சூர் அருகே தொட்டில்பாலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, மருத்துவமனையை நோக்கி ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.
மருத்துவமனை சென்றடைந்ததும் பெண்ணின் நிலைமை மோசமடையவே, மருத்துவமனைக்குள் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் சற்றும் யோசிக்காமல் அரசுப் பேருந்தை பிரசவ வார்டாக மாற்றியமைத்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.