நார்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் தொடர் போட்டிக்கான 3ம் சுற்றில் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
சர்வதேச செஸ் தொடர் போட்டிக்கான சுற்றுகள் நார்வேயில் நடைபெற்று வருகிறது, இந்த போட்டிக்காக மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற உள்ள நிலையில் 3வது சுற்று நடைபெற்றது.
இந்திய அணி சார்பாக 6 பேர் பங்கேற்ற நிலையில், இந்த 3வது சுற்றில் உலக முதல்நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களை கொண்டு எதிர்கொண்டார்.
இதில் 5 புள்ளி 5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில் ,புள்ளிகள் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் பிரக்ஞானந்தா உள்ளார். இதுவரை 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் மேலும் 7 சுற்றுகள் நடைபெற உள்ளன.