இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023ஆம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் விருது வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய மேஜர் ராதிகா சென், இந்த விருது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், இது அனைவரின் கடின உழைப்பையும் அங்கீகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.
யுனெஸ்கோவின் சவாலான சூழலில் பணிபுரியும் அமைதி காக்கும் படையினருக்கும் இந்த விருது ஊக்கமளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து ஐநா அமைதிக்காக்கும் படையில் பணியாற்றும்போது இன்னுயிரை இழக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விருது ( Dag Hammarskjöld Medal ) மறைந்த வீரர் நாயக் தனஞ்சய் குமார் சிங்கிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாயக் தனஞ்சய் குமார் சிங்கின் அர்ப்பணிப்பை ஒருபோதும் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.