2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாம் பாலின வாக்காளர்கள் வாக்களிப்பது சீராக உயர்ந்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 6 கட்ட மக்களவை தேர்தல் முடிவு பெற்றுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களின் வாக்களிப்பு வீதம் 18 புள்ளி ஏழு சதவீதத்திலிருந்து 34 புள்ளி இரண்டு சதவீதமாக இருக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களின் வாக்களிப்பு சதவீதம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 7 சதவீதமாகவும், 2019 தேர்தலில் 14 புள்ளி ஆறு சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.