தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காவல்துறையினரை தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சிவலார்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகேஷ், கஜேந்திரன், பெர்லின், நவீன் ஆகிய 4 பேரை கடந்த 29ஆம் தேதி ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து அதே நாள் இரவில் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர்களான தங்கதுரை மற்றும் ஜான்சன் ஆகியோரை 2 நபர்கள் அரிவாளால் தாக்க முயற்சி செய்து தப்பியோடினர்.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட கல்யாணசுந்தரம் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.