செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வருகை பதிவேடு குறித்து ஊழியர்களிடம் சரமாரி கேள்வியுள்ளார்.
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.அருண் ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அதிக அளவில் பட்டா மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்ததும், பணியாளர்கள் சரிவர பணிக்கு வராமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கிடப்பில் போடப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்க வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்தார்.