சமூக சீர்திருத்தவாதியும், சமயத்துறையின் தத்துவ இளவரசியுமான மாதா அகில்யா பாயின் 300வது பிறந்த நாள் இன்று முதல் ஒரு ஆண்டிற்கு கொண்டாட உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
கடந்த 1725-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி மராட்டிய மாநிலத்தில் பிறந்த இவர், மதப்பற்று, சமூக சீர்திருத்தங்களை கொண்டு அரசக் குடும்பத்தை கவர்ந்தார்.
இதன் மூலம் அரியனை ஏறிய இவர், சமயத்துறையில் பலக் கோயில்களை கட்டியும், முகலாய ஆட்சியில் அழிக்க்கப்பட்ட கோயில்களை புதுப்பித்தும் மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்தார். மாதா அகில்யா பாயின் பிறந்தநாளை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாதா அகில்யா பாயே உதாரணம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பானதாக விளங்கியதாகவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மாத அகில்யா பாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள், நாடு முழுவதும் ஓராண்டிற்கு கொண்டாடப்படும் என்றும், நம் நாட்டு பெண்களிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர பாடுபடுவோம் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.