“நாம் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளோம், இதைதான் சனாதனம் கூறுகிறது. ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களுக்காக சனாதனம் சிதைக்கப்படுகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள, ஆளுநர் மாளிகையில், சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள் உருவான தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “புத்தர் சிக்கிம் மாநிலத்தில் பிறக்கவில்லை, ஆனால், அம்மாநில பாடலில் புத்தரின் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன” என்றார்.
“இந்த மண்ணில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருக்கு சென்ற இடம் சிறப்பு கிடைத்தது” என்றும், “அவருக்கு பின்னர் வந்த இரண்டாம் சங்கராச்சாரியார், வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரும் போற்றப்பட்டார்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், “சிக்கிம் மாநிலத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு, அங்கு 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்” என்றார்.