கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம் 23-வது வார்டைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரான கௌதம் என்பவர், கடந்த சில மாதங்களாக ரயில்வே காலனியில் சரிவர தூய்மை பணியை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து 23-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் ஆகியோர் நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், புருஷோத்தமன் தாக்கியதில் கௌதமுக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.