முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 30, 2026, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசின் திட்டங்களிலும், திட்டங்கள் குறித்த விளம்பரங்களிலும் முதலமைச்சரின் பெயரையோ அல்லது முன்னாள் முதலமைச்சரின் பெயரையோ பயன்படுத்தக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரத்தில் முதலமைச்சரின் பெயரையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா,  சுந்தர் மோகன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்முதலமைச்சரின் பெயரையும், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையும், மற்றும் முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தையும் பயன்படுத்துவது முரணானது எனவும் தெரிவித்தனர்.

அரசுத் திட்டத்தில் அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதிகள் அரசுத் திட்டத்தில் ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது எனத் தெரிவித்தனர்.

எனவே அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் பெயர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது எனவும் தெளிவுபடுத்தினர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுBan on using the Chief Minister's name: Madras High Court orders
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

Next Post

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies