அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக - மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!
Aug 7, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை அவினாசி சாலையில் அரசு ஒப்புதல் கொடுத்த வரைபடத்தை மாற்றி தனியார் உணவகத்திற்குச் சாதகமாக பாலப்பணிகளை மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் பிரதான பகுதியான அவினாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முக்கிய சந்திப்புகளில் ஏறுதளமும், இறங்கு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள தனியார் உணவகத்திற்கு உள்ளே செல்லும் பாதையிலும், வெளியே வரும் பாதையிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வேறொருவருக்குச் சொந்தமான இடத்தில் தூண்களை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனக்குச் சொந்தமான இடத்தில் சம்பந்தமே இல்லாமல் பாலத்திற்கான தூண் அமைக்கும் பணியைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக நெடுஞ்சாலை அதிகாரிகள் செயல்பட்டதை நீதிமன்றம்  கண்டறிந்ததோடு, ஏற்கனவே திட்டமிட்ட வரைபடத்தின் படி பாலத்தை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு புதிய தூண்கள் அமைக்கும் செலவைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் படி பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், பொதுமக்களிடம் எந்தவித கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக வரைபடத்தை மாற்றியிருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. அரசின் உத்தரவுக்கு எதிராகவும் தனியார் உணவகத்திற்கு முரணாகவும் நடந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைய வேண்டிய பாலப்பணிகள், ஒரு சில அதிகாரிகளின் தவறால் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே 7 மாத காலம் தாமதமாகியிருக்கும் நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Mega fraud by officials: Map of bridge altered in favor of restaurantஅதிகாரிகளின் மெகா மோசடிகோவை அவினாசி சாலைபாலப்பணி
Share
Tweet
SendShare
Previous Post

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

Next Post

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies