கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்திராம்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் கூறி அப்பகுதி மக்கள் புதுப்பட்டு சாலையில் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், பேச்சு வார்த்தை நடத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டது.