டெல்லி தண்ணீர் பிரச்சினைக்கு பழைய குழாய்களை மாநில அரசு இன்னமும் மாற்றாததே காரணம் என துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டெல்லி அரசு அதன் தவறை மறைக்க பிற மாநிலங்களைக் குற்றம்சாட்டுவதாக விமர்சித்தார்.
ஹரியானாவும், உத்தர பிரதேசமும் டெல்லிக்கு தர வேண்டிய உரிய பங்கைத் தருவதாக கூறிய வி.கே.சக்சேனா, டெல்லியில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றாமல் மாநில அரசு மெத்தனத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.