பலாப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால் திண்டுக்கல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிறுமலை செட் பகுதியில் விளையும் பலாப்பழம் சுவையுடன் இருப்பதால் அதனை அதிக விலை கொடுத்து பலரும் வாங்கிச் செல்வது வழக்கம்
.இந்நிலையில் போதுமான மழை இல்லாததால் பலாப்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் விலை மிகவும் குறைந்ததால் வேதனை அடைந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பலாபழங்களை குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.