மயிலாடுதுறையில் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் சுகாதார ஆய்வாளர் பிருந்தா, நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவக ஊழியர்கள் அதிகாரிகளை ஆய்வு செய்யாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் பிருந்தா, முருகராஜ் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இது தொடர்பாக பிருந்தா அளித்த புகாரின் பேரில் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.