கடலூரில் நரிக்குறவர் இன மக்கள் திரையரங்கில் படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே நியூ சினிமா என்ற திரையரங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு படம் பார்ப்பதற்காக வந்த 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த நரிக்குறவர் இன மக்கள், காவல் நிலையத்திலும், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.