ஆந்திராவில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நியூஸ் 18 சேனல் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணி 19 முதல் 22 வரை இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒய்எஸ்ஆர் 5 முதல் 8 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி ஒரு இடம் கூட வராது எனவும் கூறப்பட்டுள்ளது. NDTV வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக கூட்டணி 10 முதல் 14 இடங்களும், ஒய்எஸ்ஆர் 13 முதல் 8 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளது. CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக கூட்டணி 19 முதல் 21 இடங்களும், ஒய்.எஸ்.ஆர் 5 முதல் 8 இடங்களும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.