தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : ஒடிசா, ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?
Jul 29, 2026, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : ஒடிசா, ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

Murugesan M by Murugesan M
Jun 2, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 மக்களவை தேர்தலோடு ஒடிசா மற்றும் ஆந்திராவில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. 7-வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

147 தொகுதிகள் கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 74 தொகுதிகள் தேவை. இதில், ஆளும் பிஜூ ஜனதா தளம் நூற்றுக்கும் மேற்பட்ட  இடங்களைக் கைப்பற்றுமென கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், நவீன் பட்நாயக் 6-வது முறையாக ஒடிசா முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் குறித்த கருத்துகணிப்புகளில் மாறுபட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில்,  பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவை. S-GED, RISE, People’s Pulse போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரா, Atma Sakshi உள்ளிட்ட நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி நைன் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: odishaparliment electionandhraexit pollexit poll 2024
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற 7-ஆம் கட்ட தேர்தல் : 62.36% வாக்குப்பதிவு!

Next Post

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : ஆந்திராவில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies