அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 47 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் களம் கண்டது. முதலமைச்சர் பெமா காண்டு உள்ளிட்ட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எஞ்சிய 50 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பா.ஜ.க. 47 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. . தேசிய மக்கள் கட்சி 6 தொகுதிகளை கைப்பற்றியது. பிற கட்சிகள் 7 தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் 47 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அபார வெற்றிபெற்றது. முதலமைச்சராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.