தெலங்கானா தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப மையமாக தெலங்கானா உருவெடுத்துள்ளதாகவும், தெலங்கானா மக்களின் செழிப்புக்கு தான் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துக் குறிப்பில், தேசத்தின் வளர்ச்சிக்கு தெலங்கானா ஆற்றிவரும் பங்களிப்புக்காக ஒவ்வோர் இந்தியரும் பெருமைப்படுவதாக கூறியுள்ளார். இதேபோல், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தெலங்கானா தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்தனர்.