இளையராஜா இசை அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தம் இன்னிசையால் நம்மை ஆட்கொண்டிருக்கும், இசைத்தாயின் தவப்புதல்வர், எங்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து, அவர்தம் இசையே. இசைஞானி , பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, தேசங்கள் கடந்து, பல தலைமுறைகளையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என இளையராஜா கூறியுள்ளார்.