முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்து வாழ்த்து செய்தியில், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணை நிலை ஆளுநரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராக கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணிகள் மேற்கொண்டவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான, அன்பு அக்கா தமிழிசை அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழிசை சௌந்தர ராஜன் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது சீரிய மக்கள் பணிகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.