ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை கூகுள் டூடுல் கொண்டாடுகிறது.
நடப்பாண்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை கொண்டாடும் வகையில் டூடுலில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தமக்கு பிடித்த கிரிக்கெட் போட்டி உலகளவில் வளர்ந்து வருவது மகிழச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.