வார விடுமுறை நாட்களையொட்டி உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
உதகைக்கு நாள்தோறும் உள்ளூர் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனையடுத்து உதகை மலை ரயிலின் சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக, கழுகுப்பார்வை காட்சிகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.