கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன்யாதவ் சாமிதரிசனம் செய்தார்.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்த மத்தியபிரதேச முதலமைச்சர் மோகன்யாதவ்வுக்கு தீட்சிதர்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர். முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் வந்த அவருக்கு சிதம்பரம் ஏ.டி.எஸ்.பி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்