நீதிமன்ற உத்தரவுப்படி காவல்நிலையத்தில் டிடிஎப் வாசன் கையெழுத்திட்டார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற டிடிஎப் வாசன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதற்காக டிடிஎப் வாசன் மீது 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 10 நாட்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிடிஎப் வாசனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த டிடிஎப் வாசன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்நிலையில், நாளை நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் டிடிஎஃப் வாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது