கோடை விடுமுறையை கொண்டாட குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்குவதாலும், குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் விடுமுறையை கொண்டாட குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக பேரருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.