பாஜக மீது மீண்டும் நம்பிக்கை வைத்த அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அருணாச்சல காரியகர்த்தாக்களின் கடின உழைப்பை பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் மாநிலம் முழுவதும் சென்று மக்களுடன் இணைந்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட விதம் பாராட்டுக்குரியது. இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வளர்ச்சி அரசியலுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவவித்துள்ளார்.