தேர்தல் முடிவு குறித்த கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் சார்லஸ் ஜான் கென்னடியின் புதுமனை புகு விழாவில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்பதே மக்களின் கணிப்பாக உள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்திலும் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் கூறினார். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் அமையும் அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், நாட்டு மக்களின் நலன்கருதி பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வதை கொச்சைப்படுத்தி பேசுவது நாகரீக அரசியலில் நல்லதல்ல என்றும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.