திருவள்ளூர் அருகே சிறுளப்பாக்கம் சிவபால முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலாமாக நடைபெற்றது.
விழாவையொட்டி ஐம்பொன்னிலான ஸ்ரீ சிவபால முனீஸ்வரர் சிலையின் கண் திறக்கப்பட்டு, பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் சந்தனம் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து மேள தாளங்களுடன் புனித நீர் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.