கடலூரில் ஆற்றுக்குள் கார் கவிழ்ந்ததில், நல்வாய்ப்பாக பயணம் செய்த 5 பேர் உயிர் தப்பினர்.
கள்ளக்குறிச்சி மாமனந்தலைச் சேர்ந்த சிவபாலன் என்பவர், தனது உறவினர்களுடன் காரில் வில்லியனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
குமத்தான் மேடு தரைப்பாலம் வழியாக சென்ற கார், மழையால் கட்டுப்பாட்டை இழந்து தென்பெண்ணை ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 5 பேர் உயிர் தப்பிய நிலையில், கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.