தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் புனித நீராடிய 10க்கும் மேற்பட்டோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில், வார விடுமுறையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கடலில் புனித நீராடியபோது கடல் சீற்றத்தால் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.