கேரளாவில் தொலைந்துபோன சைக்கிளால் துவண்டுபோன மாணவிக்கு மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி புதிய சைக்கிள் பரிசளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பலரிவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி அவந்திகாவின் சைக்கிள் அண்மையில் திருடுபோனது.
இதையறிந்த கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, அவந்திகாவை தொடர்புகொண்டு பேசி, அவருக்கு புதிதாக சைக்கிள் பரிசளித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத அவந்திகா, அமைச்சரின் செயல் தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.