தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் எதிரொலியால் இந்திய பங்குச்சந்தை உச்சம் தொடும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த வெளியான கருத்துக் கணிப்பில் பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் இந்திய பங்குச்சந்தையில் நிஃப்டி நிலவரம் 23 ஆயிரத்தை எட்டும் என பங்குசந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் பாஜக 350 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்தால் நிஃப்டி நிலவரம் 23 ஆயிரத்து 500 புள்ளிகளை தாண்டும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.