டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்ட்ர சமிதி நிர்வாகி கே.கவிதாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கவிதாவை அமலாக்கத் துறையினர் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.
இன்றுடன் அவரது நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததால், அவரை மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.